NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது
    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது

    சென்னையில் இரவில் தனியே செல்லும் பெண்களிடம் அத்துமீறிய பைக் டாக்சி ஓட்டுநர் கைது

    எழுதியவர் Nivetha P
    Nov 20, 2023
    04:05 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகர் டிபி சத்திரம் காவல் நிலையத்தில், 42 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    அதில், நேற்று முன்தினம் 13 வயதுடைய தனது மகள், தனது ட்யூஷனை முடித்துவிட்டு வீடு திரும்புகையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் ஒருவர் தனது மகளை வழியில் தடுத்து நிறுத்தி அவரிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் அந்த நபர் மீது தக்க நடவடிக்கை எடுக்கும்படி அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

    இதனடிப்படையில் அந்த காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சக்தி வேலாயுதம் தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதிக்கு சென்று அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

    சம்பவ தினத்தன்று பதிவாகிய 200க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    கைது 

    பாலியல் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு 

    அதன்பின்னர் அந்த வாகனத்தின் எண் கண்டறியப்பட்டு, அதனை வைத்து அந்த இளைஞரின் விவரங்களும் அறியப்பட்டது.

    அதன்படி, சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த நபர், டி.பி.சத்திரம் பூஜ்ஜி தெருவினை சேர்ந்த யோகேஸ்வரன்(24)என்பது தெரியவந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு விரைந்த காவல்துறை அவரை கைது செய்தது.

    விசாரணையில் அந்நபர் பிரபல தொலைக்காட்சியில் பணிபுரிந்துள்ளார் என்பதும், அவரது நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் பணியிலிருந்து நீக்கப்பட்டு தற்போது ஆன்லைன் உணவு டெலிவரி மற்றும் பைக் டாக்சி ஓட்டும் பணிகளை மேற்கொள்கிறார் என்றும் தெரியவந்துள்ளது.

    இரவுநேரங்களில் தனியாக வரும் ஏராளமான பெண்களிடம் இவர் தொடர்ந்து இதுபோன்று பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியான நிலையில், இவ்வழக்கானது தற்போது கீழ்ப்பாக்கம் மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

    இவர்மீது பாலியல் வன்கொடுமை பிரிவின்கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    காவல்துறை
    காவல்துறை
    கைது

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    சென்னை

    தீபாவளி பண்டிகை - சென்னையில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபாடு தீபாவளி
    பிரபுதேவாவின் தம்பி வீட்டில் எழுந்த சர்ச்சை குறித்த முழு விவரம் நடிகர்
    ராகவா லாரன்ஸை ஹீரோவாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் காலமானார் இயக்குனர்
    தீபாவளிக்கு மறுநாள், நவ.,13ஆம் தேதி, கோயம்பேடு மார்க்கெட் செயல்படாது  கோயம்பேடு

    காவல்துறை

    தூத்துக்குடி புதுமண தம்பதி கொலை வழக்கு - பெண்ணின் தந்தை அதிரடி கைது  திருமணம்
    முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது கைது
    திமுக வழக்கறிஞர் சரமாரியாக வெட்டி கொலை: காரணம் என்ன ? - க்ரைம் ஸ்டோரி க்ரைம் ஸ்டோரி
    50க்கும் மேற்பட்ட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி முதல்வர் கைது: ஹரியானாவில் பரபரப்பு  ஹரியானா

    காவல்துறை

    தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிப்பதில் 19 கட்டுப்பாடுகள் - சென்னை மாநகர காவல்துறை விபத்து
    ரிவர்ஸ் எடுப்பதற்கு பதிலாக கியரை போட்டதால் 3 பேர் பலி: ஆந்திர பேருந்து நிலையத்தில் பரிதாபம்  ஆந்திரா
    மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் காயம், 4 பேர் கடத்தல்  மணிப்பூர்
    கோவை தனியார் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட ஏழு மாணவர்கள் கைது கோவை

    கைது

    சிவகங்கையில் ரயில் மறியல் போராட்டம் - 500 பேர் கைது போராட்டம்
    ஈராக் நாட்டில் திருமண நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் 100 பேர் பரிதாபமாக பலி திருமணங்கள்
    ஆருத்ரா மோசடி வழக்கு - சிறப்பு நீதிமன்றத்தினை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவு சென்னை
    காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி விபத்து
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025