மின்சார ரயில் சேவைகளில் பராமரிப்பு பணி காரணமாக சேவையில் மாற்றம்
சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம், பட்டாபிராம் மிலிட்டரி, ஆவடி, கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் இன்று(ஏப்ரல்.,1)முதல் 25ம்தேதி வரை கீழ்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.40க்கு இயக்கப்படும். சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே காலை 5 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் பேசின் பிரிட்ஜ்-சென்ட்ரல் இடையேயும், சென்ட்ரல்-சூலூர்பேட்டை இடையே காலை 7.30மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும், சூலூர்பேட்டை-சென்ட்ரல் இடையே இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் கொருக்குப்பேட்டை-சென்ட்ரல் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 6.25மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்ட்ரல்-பேசின் பிரிட்ஜ் இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் சேவை மாற்றங்கள் வரும் 25ம் தேதி வரை அமலில் இருக்கும்
மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி இடையே இரவு 10.35மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் மிலிட்டரி-ஆவடி இடையே இரவு 11.55மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரல்-திருவள்ளூர் இடையே இரவு 11.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து இரவு11மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே இரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும். சென்ட்ரல்-ஆவடி இடையே நள்ளிரவு 12.15மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னைகடற்கரையில் இருந்து நள்ளிரவு 12.20மணிக்கு இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் வரும் 25ம்தேதிவரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.