NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள்
    சந்திரயான்-3 வெற்றிக்கு பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    'நிலவில் இந்தியா': மாறி மாறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்திய தலைவர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Aug 23, 2023
    07:29 pm

    செய்தி முன்னோட்டம்

    சந்திரயான்-3யின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இன்று நிலவில் தரையிறக்கப்பட்டதை அடுத்து, பிரபலங்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

    தென்னாபிரிக்காவில் இருந்து பிரதமர் மோடி-

    "இந்த பெருமையான தருணத்தில் எனது நாட்டு மக்களுடன் நானும் இணைந்துள்ளேன். இந்த பணியை வெற்றிகரமாக செய்த இஸ்ரோவில் உள்ள விஞ்ஞானிகள் குழுவிற்கு எனது வாழ்த்துகள். நாம் அனைவரும் சந்திரனை அடைவதை தாண்டியும் கனவு காணலாம். இந்தியாவின் சந்திர பயணம் உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகளுக்கு உதவியாக இருக்கும். உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளும் சந்திரனை அடைய முடியும் என்பதை இது காட்டுகிறது. வானம் என்பது எல்லையல்ல என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த நாளை நாடு என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்."

    டவ்க்ஜ்ன்

    இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத்-

    "நிலவில் மென்மையான தரையிறக்கத்தை நடத்தியுள்ளோம். இந்தியா தற்போது நிலவில் உள்ளது. திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேல், உதவி இயக்குனர் கல்பனா, பணி இயக்குனர் ஸ்ரீகாந்த், யுஆர்எஸ்சி இயக்குனர் சங்கரன் ஆகியோருக்கு வாழ்த்துகள்."

    திட்ட இயக்குனர் பி வீரமுத்துவேல்-

    "எங்களது குழுவின் சார்பில் இந்த தருணத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறேன். இந்த இலக்கை அடைந்தது மிகவும் திருப்தி அளிக்கிறது. இந்த திட்டத்தின் திட்ட இயக்குநர் என்ற முறையில், இந்த திட்டம் தொடங்கியதில் இருந்து நிலவில் தரையிறங்கும் வரை எந்தவொரு குறைபாடும் இல்லாமல் இருந்தது என்பதை தெரிவித்து கொள்கிறேன். நாம் நிலவில் மென்மையான தரையிறக்கத்தை செய்த நான்காவது நாடாக உருவாகியுள்ளோம். நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சென்ற முதல் நாடு என்ற பெருமையையும் பெற்றுள்ளோம். "

    டியூயோக்

    உள்துறை அமைச்சர் அமித்ஷா-

    "சந்திரயான் 3 திட்டத்தின் வெற்றியின் மூலம் நிலவின் தென் துருவத்தைத் தொட்ட முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. விண்வெளிக்குள் இந்திய நிறுவனங்கள் நுழைவதற்கு இந்தியா ஒரு நுழைவுவாயிலை திறந்திருப்பதனால், நமது இளைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகள உருவாகும்."

    வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்-

    "குறையில்லாமல் சந்திரயான்-3 திட்டத்தை நிறைவேற்றிய இஸ்ரோ குழுவை வாழ்த்துகிறேன். ஒட்டுமொத்த தேசமும் உங்களை நினைத்து பெருமை கொள்கிறது. இந்த சாதனை உலகம் முழுவதும் எதிரொலிக்கும்,"

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-

    "சந்திரயான்-3யின் வெற்றி ஒவ்வொரு இந்தியனின் கூட்டு வெற்றியாகும். 140 கோடி மக்களை கொண்ட ஒரு மகிழ்ச்சியான தேசம் தனது ஆறு தசாப்த கால விண்வெளி திட்டத்தில் இன்று மற்றொரு சாதனையை கண்டுள்ளது."

    நடிஹச்பவ்ட்

    காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 

    "இன்றைய சாதனைக்காக இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள். சந்திரயான்-3, நிலவின் பெயரிடப்படாத தென் துருவத்தில் மென்மையாக தரையிறக்கப்பட்டது. இது நமது அறிவியல் சமூகத்தின் பல தசாப்தகால அபார புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பின் விளைவாகும். 1962ஆம் ஆண்டு முதல், இந்தியாவின் விண்வெளித் திட்டம் புதிய உயரங்களை கண்டுள்ளது."

    நிதியமைச்சர் நிர்மலா-சீதாராமன்

    "இந்தியா இப்போது நிலவில் உள்ளது. நிலவின் தென் துருவத்தில் இந்தியா தரையிறங்கியது உலக நன்மைக்காகவே. இஸ்ரோ, நீங்கள் தான் விண்வெளி சகாப்தத்தின் தலைவர்கள்!"

    பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்-சிங்

    "விண்வெளியில் இந்தியாவின் சாதனைகள் இப்போது முன்னோடியில்லாத உயரத்தைத் தொட்டுள்ளன. தங்களின் புத்திசாலித்தனம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இந்த பணியை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளை நினைத்து நாடு பெருமை கொள்கிறது."

    டிரோஜ்வ்க்

    அமெரிக்காவின் 'நாசா' தலைவர் பில் நெல்சன்-

    "சந்திரயான்-3ஐ சந்திர தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கியதற்கு இஸ்ரோவுக்கு வாழ்த்துகள்! மேலும் நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றதற்கு வாழ்த்துகள். இந்த திட்டத்தில் உங்களது கூட்டாளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்!"

    ஐரோப்ப விண்வெளி நிறுவனத்தின்(ESA) பொது இயக்குனர் ஜோசப் அஷ்பேச்சர்-

    "இஸ்ரோ, சந்திராயன்-3 திட்டக்குழு, மற்றும் அனைத்து இந்திய மக்களுக்கும் வாழ்த்துகள். புதிய தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தி இந்தியாவின் முதல் மென்மையான தரையிறக்கத்தை அடைந்து காட்டி என்னை ஈர்த்துவிட்டார்கள். இந்த செயல்முறைக்கு துணைபுரிந்த ESA குழுவுக்கு மீண்டும் வாழ்த்துகள். உங்களிடம் இருந்து நாங்களும் சிறந்த பாடங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறோம். ஒரு வலுவான சர்வதேச பங்குதாரர் தான் ஒரு சக்திவாய்ந்த பங்குதாரர் ஆவார்."

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இஸ்ரோ
    சந்திரயான் 3
    இந்தியா

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    இஸ்ரோ

    சந்திராயன்-3 திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் விண்வெளி
    சந்திராயன்-2 மற்றும் சந்திராயன்-3 திட்டங்களுக்கு இடையேயான வேறுபாடுகள் என்ன? சந்திரன்
    சந்திராயன்-2வின் தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு புதிய திட்டத்தை வடிவமைத்திருக்கும் இஸ்ரோ விண்வெளி
    என்னென்ன உபகரணங்களை எடுத்து செல்கிறது சந்திராயன்-3 விண்கலம்? விண்வெளி

    சந்திரயான் 3

    இன்று மதியம் 2:35 மணிக்கு விண்ணில் பாய்கிறது சந்திரயான் 3  சந்திரயான்
    சந்திரயான் 3 : பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து சந்திரயான்
    ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணை நோக்கி சீறி பாய்ந்தது சந்திரயான்-3 சந்திரயான்
    வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திரயான் 3: அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?  சந்திரயான்

    இந்தியா

    இறுதிக்கட்டப் பணிகளை முடித்து தரையிறக்கத்திற்குத் தயாராகும் சந்திரயான் 3 சந்திரயான் 3
    வெங்காய ஏற்றுமதியின் மீது 40% ஏற்றுமதி வரி விதித்திருக்கும் மத்திய அரசு வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் கொரோனா
    வரலாற்று நிகழ்வு: ராஜீவ் காந்தியின் படுகொலைக்கான காரணம் என்ன? வரலாற்று நிகழ்வு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025