Page Loader
ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 

ஆந்திராவில் 151 இடங்களில் போட்டியிட இருக்கிறது சந்திரபாபு நாயுடுவின் கட்சி 

எழுதியவர் Sindhuja SM
Feb 24, 2024
02:54 pm

செய்தி முன்னோட்டம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜன சேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் ஆந்திர பிரதேச சட்டசபை தேர்தலுக்கான பட்டியலில் 118 பேர் கொண்ட வேட்பாளர்களின் முதல் பட்டியலை இன்று வெளியிட்டனர். ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்நிலையில், சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் கட்சி 151 இடங்களிலும், ஜன சேனா 24 இடங்களிலும் போட்டியிடும். நாக லோகேஷ் மங்களகிரி தொகுதியிலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் குப்பம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தங்கள் கட்சிகள் கூட்டணியில் சேர முடிவு செய்யும் பட்சத்தில் பாஜகவுக்கு இடமளிக்க வேண்டியதன் அவசியத்தை மனதில் வைத்து இந்த தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இரு தலைவர்களும் தெரிவித்தனர்.

ஆந்திரா

 பாஜகவுடன் கூட்டணி வைக்க பேச்சு வார்த்தை 

"இந்த கூட்டணி மாநிலத்தின் எதிர்காலத்திற்கானது. இது ஒரு பெரிய முயற்சிக்கான முதல் படியாகும்" என்று நாயுடு, தனது ஆந்திரப் பிரதேச இல்லத்தில் டிடிபி-ஜனசேனா கூட்டணி குறித்து செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றினார் தற்போது பாஜகவுடன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி குறித்து ஆலோசித்து வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முதல் பட்டியலில் 118 வேட்பாளர்கள் உள்ளனர்; தெலுங்கு தேசம் கட்சி 94 போட்டியாளர்களை முன்னிறுத்தியுள்ளது. அதே நேரத்தில் கூட்டணிக் கட்சியான ஜன சேனாவுக்கு 24 சட்டமன்ற சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கான வேட்ப்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.