Page Loader
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும் 

எழுதியவர் Sindhuja SM
Sep 11, 2023
04:33 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 11 மற்றும் செப்டம்பர் 12 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 13 முதல் செப்டம்பர் 17 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அடுத்த 7 நாட்களுக்கு தமிழக கடலோர பகுதிகள், வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

ஒப்பிவ்க்

சென்னையின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.