
அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்
செய்தி முன்னோட்டம்
தமிழக பகுதிகளில் நிலவும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்டம்பர் 13 மற்றும் செப்டம்பர் 14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 15 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 16 மற்றும் செப்டம்பர் 17 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
பிணிக்கேஜ்க
சென்னையின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
இன்று காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. அது இன்னும் அடுத்த 3 நாட்களில் ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.