Page Loader
10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அநேக பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

10 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Nov 05, 2023
06:17 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நவம்பர் 5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல் மேலும், அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் அநேக பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

வ்ஜ்கஃசாஜ்

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு 

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். நேற்று அதிகப்பட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 13 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது