LOADING...
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு 
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் வரம்பை விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் ரத்தாகிறதா? புதிய திட்டத்தை கொண்டு வரும் மத்திய அரசு 

எழுதியவர் Venkatalakshmi V
Dec 15, 2025
12:33 pm

செய்தி முன்னோட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத சட்டம் (MGNREGA) எனப் பிரபலமாக அறியப்படும் மத்திய அரசின் கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றுவதற்கும், அதன் வரம்பை விரிவுபடுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. MGNREGA திட்டமானது இனி 'பூஜ்ய பாபு கிராமின் ரோஜ்கர் யோஜனா' (Poojya Bapu Grameen Rozgar Yojna - PBGRY) எனப் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது. இது 'விக்சித் பாரத் (மேம்பட்ட இந்தியா)' இலக்குடன் இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக Viksit Bharat—Guarantee for Rozgar and Ajeevika Mission(Gramin) VB—G RAM G என்ற மசோதா நிறைவேற்றப்படவுள்ளது.

மேம்பாடு

புதிய மசோதாவில் உள்ள மேம்பாடுகள்

இந்த மசோதாவின் கீழ், கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்கள் வேலை வழங்கப்பட்டு வந்த நிலையில், அது 125 நாட்களாக அதிகரிக்கப்பட உள்ளது. இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1.51 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வேறுபாடுகள்

MGNREGA திட்டத்திற்கும் புதிய திட்டத்திற்கும் உள்ள வேறுபாடுகள்

புதிய மசோதாவில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட மாநில வாரியான ஊதிய விகிதம் என்பது மாற்றப்பட்டு, குறைந்தபட்ச ஊதியம் ₹240 எனவும், மாநில வாரியான வேறுபாடுகளுக்கு அது உட்பட்டது எனவும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக, வேலை செய்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் சட்டப் பாதுகாப்பு மற்றும் அதன் அடிப்படை நோக்கம் புதிய மசோதாவில் மாற்றமின்றி தொடரும். இந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நிதியாண்டுகளின் தேவைக்கேற்ப முன்னர் மாற்றப்பட்டது. தற்போது திருத்தப்பட்ட திட்டத்திற்காக ₹1.51 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துதல், இடம்பெயர்வுகளைக் குறைத்தல் என்பது மாறி, 'விக்சித் பாரத்' இலக்குடன் திட்டத்தை இணைத்தல் மற்றும் நீர் பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளித்தல் என்பது புது திட்டத்தின் நோக்கமாகும்.

Advertisement

சீர்திருத்தங்கள்

முன்மொழியப்பட்ட பிற சீர்திருத்தங்கள்

நிதியளிப்பு முறை மாற்றம்: தற்போதைய திட்டத்தில், ஊதியத்தின் 100% செலவை மத்திய அரசு ஏற்றுக்கொள்கிறது. ஆனால், முன்மொழியப்பட்ட மாற்றத்தில், மாநிலப் பொருளாதாரக் குறியீடுகளின் அடிப்படையில் நிதியளிப்பு முறையை மாற்றியமைக்கலாம் என்றும், நிதிச் செலவினத்தில் மத்திய அரசின் பங்களிப்பைக் குறைத்து மாநிலங்களின் பங்களிப்பை அதிகரிக்கலாம் என்றும் ஒரு ஆலோசனை உள்ளது. பொருளாதார விலக்கு விதிகள்: பொருளாதார ரீதியாக வலிமையான மாநிலங்களில் இத்திட்டத்தின் நிதிப் பாய்ச்சலைக் குறைத்து, மிகவும் பின்தங்கிய மாநிலங்களுக்கு நிதி அதிக அளவில் கிடைப்பதை உறுதி செய்ய, சில விலக்கு விதிகளை அறிமுகப்படுத்த அரசு பரிசீலிப்பதாக தெரிகிறது.

Advertisement