இன்று உங்கள் தொலைபேசியில் அவசர எச்சரிக்கை வந்ததா? இதோ அதன் அர்த்தம்
இந்தியாவில் உள்ள பல ஸ்மார்ட்போன்களில், 'அவசரகால ஃபிளாஷ் செய்தி' சோதனை ஓட்டமாக, மத்திய அரசு இன்று முயற்சி செய்தது. அதன்படி, பெரிய பீப் ஒலியுடன், செல்போனின் தொடுதிரையில் தோன்றிய இந்த பிளாஷ் மெசேஜில்,"இது இந்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை மூலம், செல் ஒலிபரப்பு அமைப்பு மூலம் அனுப்பப்பட்ட மாதிரி சோதனைச் செய்தியாகும். இந்தச் செய்தியைப் புறக்கணிக்கவும். உங்கள் முடிவில் இருந்து எந்த நடவடிக்கையும் தேவையில்லை. இந்தச் செய்தி TEST Pan-India Emergency Alert System க்கு அனுப்பப்பட்டது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம். இது பொது பாதுகாப்பை மேம்படுத்துவதையும், அவசர காலங்களில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்ததது.
பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்படும் என மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது
இன்று மதியம் 12.19 மணிக்கு, இந்தியாவில் உள்ள அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் இந்த செய்தி வந்துள்ளது. பலரையும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய வைத்த இந்த சோதனை முயற்சி, மொபைல் ஆபரேட்டர்கள் மற்றும் செல் ஒளிபரப்பு அமைப்புகளின் அவசர எச்சரிக்கை ஒளிபரப்பு திறன்களின் செயல்திறன் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு, வெவ்வேறு பிராந்தியங்களில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் என்று தொலைத்தொடர்பு துறையின் செல் ஒளிபரப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.