
மூடிஸ் நிறுவனத்தின் ஆதார் மதிப்பாய்வுக்கு பதிலளித்த மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் ஆதார் அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பி, மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் வெளியிட்டுள்ள அறிக்கைக்கு, மத்திய அரசு கடுமையான மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளது.
மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆதார் "உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடி" எனக் கருதப்படுகிறது என்றும், மூடிஸ் அறிக்கை சரியான மேற்கோள்கள் இன்றி அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மூடிஸ் முதலீட்டாளர் சேவையை எதிர்த்து, "ஒரு குறிப்பிட்ட முதலீட்டாளர் சேவை, எந்த ஆதாரமும் அல்லது அடிப்படையும் இல்லாமல், ஆதாருக்கு எதிராக, உலகின் மிகவும் நம்பகமான டிஜிட்டல் ஐடிக்கு எதிராக பெரும் வலியுறுத்தல்களை செய்துள்ளது." என பெயர் குறிப்பிடாமல் சாடியது.
card 2
ஆதார் குறித்த சந்தேகங்களுக்கு வலுவாக பதிலளித்த மத்திய அரசு
ஆதார் அமைப்பு அடிக்கடி சேவை மறுப்புக்கு வழிவகுக்கிறது மற்றும் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது என்று மூடிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு தான் மத்திய அரசு தற்போது பதிலளித்துள்ளது.
முகம் மற்றும் கருவிழி அங்கீகாரம் போன்ற தொடர்பற்ற பயோமெட்ரிக் முறைகளை மூடிஸ் கவனிக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"மையப்படுத்தப்பட்ட ஆதார் அமைப்பில், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை குறித்த சந்தேகங்கள் எழுவதாக அந்த அறிக்கை கூறுகிறது. இது தொடர்பான உண்மை நிலை, ஏற்கனவே பலமுறை விளக்கம் தரப்பட்டுள்ளது. இங்கு இதுநாள் வரை எந்த மீறலும் நடைபெற்றதாக புகாரளிக்கப்படவில்லை" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.