
230க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை தடை செய்கிறதா மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீன நாட்டின் இணைப்புகளைக் கொண்ட 230க்கும் மேற்பட்ட மொபைல் அப்ளிகேஷன்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகம்(MHA), மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன்(MeitY) தொடர்பு கொண்டு, 138 பந்தயம் கட்டும் மற்றும் 94 கடன் வழங்கும் ஆப்ஸ்களை "அவசரகால" அடிப்படையில் தடை செய்வது குறித்து பேசியது.
அதனால், இந்த ஆப்ஸ்களைத் தடை செய்யும் செயல்முறையை MeitY தொடங்கியுள்ளது.
2020இல் சீனாவுடனான எல்லைப் பதற்றம் அதிகரித்ததில் இருந்து 300க்கும் மேற்பட்ட சீன ஆப்ஸ்களை இந்திய அரசு தடை செய்தது.
முதற்கட்ட தடைகள் ஜூன் 2020இல் அறிவிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் அதேபோன்ற தடைகள் அறிவிக்கப்பட்டன.
சீனா
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம்
2020இல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்கள் மற்றும் 2022இல் நடந்த அருணாச்சலின் தவாங் செக்டார் மோதலைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் சீனாவிற்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது.
ஆறு மாதங்களுக்கு முன், MHAஐப் புகாரளித்தத்தை அடுத்து , கடன்-வழங்கும் 288 சீன ஆப்ஸ்கள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, Play Store மற்றும் App Storeஇல் இதுபோன்ற 94 ஆப்ஸ்கள் கிடைத்தன.
இந்தியர்களின் தனிப்பட்ட தகவல்களை பெறுவது மட்டுமல்லாமல், இந்த ஆப்ஸ்கள் உளவு மற்றும் பிரச்சாரத்திற்கும் பயன்படுத்தப்படலாம் என்று MHA கூறியுள்ளது.
இரண்டு அமைச்சகங்களின் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இந்த ஆப்ஸ்கள் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது. அதனால். IT சட்டத்தின் பிரிவு 69இன் கீழ் இதற்காக நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.