EPF-க்கான வட்டி வகிதத்தை 8.15% ஆக உயர்த்தியது மத்திய அரசு
2022-23-ல் தொழிலாளர் வைப்பு நிதி திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு வழங்கப்படும் வட்டி வகிதத்தை 0.05% உயர்த்தி 8.15%-ஆக அதிகரித்திருக்கிறது மத்திய அரசு. இதுகுறித்த அறிப்பை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தங்களுடன் பகிர்ந்திருப்பதாக அறிவித்திருக்கிறது தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு. 2021-22-ல் EPF திட்டத்தின் கீழ் முதலீடு செய்யப்படும் பணத்திற்கான வட்டி விகிதத்தை 8.10%-ஆக குறைப்பதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவித்தது மத்திய அரசு. அதற்கு முன்னதாக 2020-21-ல் 8.5% வட்டி வகிதம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 40 ஆண்டுகளில் மிகவும் குறைந்த வட்டி வகிதமாக இது கருதப்பட்ட நிலையில், தற்போது அந்த வகிதத்தை சற்று உயர்த்தியிருக்கிறது மத்திய அரசு.