LOADING...
விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு
விமான கட்டணங்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயம் செய்து உத்தரவு

விமான கட்டணங்கள் இதை விட அதிகமாக இருக்கக் கூடாது; மத்திய அரசு கடுமையான உத்தரவு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
06:13 pm

செய்தி முன்னோட்டம்

இண்டிகோ விமான நிறுவனத்தில் ஏற்பட்ட சேவைச் சீர்குலைவைத் தொடர்ந்து, விமான டிக்கெட் விலைகள் விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்ததால், மத்திய அரசு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பயணிகளை சந்தர்ப்பவாத விலையிலிருந்து பாதுகாக்க, அனைத்து விமான நிறுவனங்களும் நிர்ணயிக்கப்பட்ட புதிய கட்டண உச்சவரம்புகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தூரம்

தூரம் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம்

இந்த அவசரகால உத்தரவின் கீழ், உள்நாட்டு விமானப் பயணங்களுக்கான பொருளாதார வகுப்பு (Economy-class) கட்டணங்களில் நாடு தழுவிய கட்டண உச்சவரம்பு உடனடியாக விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரம்பு தூரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 500 கிமீ வரை ₹7,500, 1000 கிமீ வரை ₹12,000, 1500 கிமீ வரை ₹15,000, 1500 கிமீக்கு மேல் ₹18,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிகள், UDF, PSF ஆகியவற்றைத் தவிர்த்து இந்தக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. வணிக வகுப்பு (Business-class) கட்டணங்களுக்கு இந்த வரம்பு பொருந்தாது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement

சேவைகள்

கூடுதல் விமான சேவைகள்

கடந்த சில நாட்களில், டெல்லி-மும்பை போன்ற வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் ₹65,000 வரை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்தக் கட்டண வரம்புகள் நிலைமை சீரடையும் வரை அமலில் இருக்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அனைத்து முன்பதிவு தளங்களிலும் இந்தக் கட்டண உச்சவரம்பு பின்பற்றப்பட வேண்டும் என்றும், அதிகத் தேவை உள்ள வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்க வேண்டும் என்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இன்று சுமார் 500 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருந்தாலும், சேவைகள் படிப்படியாகச் சீரடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement