உஸ்பெகிஸ்தானில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகரான தாஷ்கண்ட்'ல் சர்வதேச திரைப்பட திருவிழா நேற்று(செப்.,29)துவங்கி நாளை(அக்.,1) வரை நடக்கவுள்ளது. மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானில் நடக்கும் இந்த விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவானது நேற்று முன்தினம்(செப்.,28) புறப்பட்டு சென்றனர். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் இந்த குழுவுக்கு தலைமை வகித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற எல்.முருகன் குழுவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான திரைப்பட உறவினை ஏற்படுத்துவதோடு, திட்டங்களை பரிமாறி கொண்டு சினிமா தயாரிப்பினை அதிகரிக்கவும், இருநாட்டின் கலாச்சாரத்திற்கு இடையே ஓர் பாலம் அமைக்கவும் நோக்கில் தான் இவ்விழாவில் பங்கேற்பதாக மத்திய அரசு முன்னதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.