பெங்களூரு குண்டுவெடிப்பு: வெடி குண்டு வைப்பதற்கு முன் 9 நிமிடம் கஃபேக்குள் அமர்ந்திருந்த சந்தேக நபரின் வீடியோ
செய்தி முன்னோட்டம்
கடந்த வாரம் பெங்களூருவில் உள்ள ஒரு பிரபலமான ஓட்டலில் வெடிகுண்டு வைத்த சந்தேக நபர், ஓட்டலை விட்டு வெளியேறுவதற்கு முன்பு ஒன்பது நிமிடங்கள் உள்ளே இருந்தார் என்பது சிசிடிவி வீடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த சந்தேக நபர் சன்கிளாஸ், முகமூடி மற்றும் பேஸ்பால் தொப்பியுடன் பேருந்து நிலையத்திலிருந்து ராமேஸ்வரம் கஃபே நோக்கி நடந்து செல்வது புதிய வீடியோவில் நன்றாக தெரிகிறது.
வெள்ளிக்கிழமை காலை 11.34 மணியளவில் பெங்களூரு புரூக்ஃபீல்டில் உள்ள ஓட்டலில் நுழையும் போது அவர் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.
மற்றொரு வீடியோ, சந்தேக நபர் காலை 11.43 மணிக்கு ஓட்டலில் இருந்து வெளியேறுவதைக் காட்டுகிறது. எனவே சரியாக 9 நிமிடங்கள் மட்டும் அவர் கஃபேவுக்குள் இருந்திருக்கிறார்.
ட்விட்டர் அஞ்சல்
சந்தேக நபரின் புதிய வீடியோ
CCTV Shows Suspect In The Rameshwaram Cafe Blast Sat Inside For 9 Minutes
— Social News Daily (@SocialNewsDail2) March 4, 2024
The suspect in the bombing of a popular cafe in Bengaluru last week spent nine minutes inside before he left, new CCTV footage shows.
The new footage shows the suspect in sunglasses, mask, and a baseball… pic.twitter.com/UwtM54F6f6