சி.பி.எஸ்.சி. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது
இந்தியா முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி மத்திய கல்வி வாரிய பாடத்திட்டத்தில்(சிபிஎஸ்சி) 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வானது துவங்கி நடத்தப்பட்டது. அதன்படி இன்று(மே.,12) சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது. சென்னை மண்டலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது 97.40%ஆக உள்ளது. இதற்கிடையே ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதமானது தொடர்ந்து குறைந்து வருகிறது என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதமானது 92.71%ஆக இருந்த நிலையில், இந்தாண்டின் தேர்ச்சி விகிதம் 87.33%ஆக பதிவாகி, 5 சதவீதம் குறைந்துள்ளது. மேலும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 99.91% பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.