LOADING...
₹1,000 கோடி சைபர் மோசடி: 4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட மோசடி முறியடிப்பு
4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட ஆன்லைன் மோசடி முறியடிப்பு

₹1,000 கோடி சைபர் மோசடி: 4 வெளிநாட்டவர், 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட பிரமாண்ட மோசடி முறியடிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Dec 14, 2025
12:05 pm

செய்தி முன்னோட்டம்

மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ), ₹1,000 கோடிக்கும் அதிகமான சர்வதேச சைபர் கிரைம் நெட்வொர்க்கைப் பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரை ஏமாற்றிய இந்த மோசடியில் நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் 111 ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடி வலையமைப்பு, பொய்யான ஆன்லைன் கடன் செயலிகள், போலியான முதலீட்டுத் திட்டங்கள், பகுதி நேர வேலை வாய்ப்பு மோசடிகள் மற்றும் ஆன்லைன் கேமிங் தளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்திப் பொதுமக்களை ஏமாற்றியுள்ளது. முழு விவரம் இங்கே:-

மோசடி

மோசடியின் வழிமுறைகள்

இதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு: நிதி முறைகேடு: இந்த நெட்ஒர்க் பொன்சி திட்டங்கள் (Ponzi Schemes) மற்றும் எம்எல்எம் திட்டங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வந்தது. ஷெல் நிறுவனங்கள்: உண்மையான கட்டுப்பாட்டாளர்களின் அடையாளங்களை மறைத்து, சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, போலியான இயக்குநர்கள், போலி ஆவணங்கள் மற்றும் போலியான முகவரிகளைப் பயன்படுத்தி 111 ஷெல் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. தொழில்நுட்பப் பயன்பாடு: கூகுள் விளம்பரங்கள், மொத்த எஸ்எம்எஸ் பிரச்சாரங்கள், சிம்-பாக்ஸ் மெசேஜிங் அமைப்புகள், கிளவுட் சர்வர்கள் மற்றும் ஃபின்டெக் தளங்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இந்த மோசடி மிகவும் அடுக்குமுறையில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கைது

விசாரணை மற்றும் கைது

உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நான்கு வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட மொத்தம் 17 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த மோசடி மூலம் நூற்றுக்கணக்கான வங்கிக் கணக்குகள் வழியாக ₹1,000 கோடிக்கும் மேல் பணம் மாற்றப்பட்டுள்ளது. இதில் ஒரு கணக்கு மட்டும் குறுகிய காலத்தில் ₹152 கோடிக்கு மேல் பெற்றுள்ளது. இந்த மோசடியின் வெளிநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் ஸோவ் யி, ஹுவான் லியு, வெய்சியன் லியு மற்றும் குவான்ஹுவா வாங் ஆகியோர் ஆவர்.

Advertisement

ஆபரேஷன்

ஆபரேஷன் சக்ரா மூலம் தேடுதல் வேட்டை

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா முழுவதும் 27 இடங்களில் சிபிஐ தேடுதல் வேட்டை நடத்தியது. இந்த நடவடிக்கை, நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் சர்வதேச சைபர் பொருளாதாரக் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிபிஐ தொடங்கிய ஆபரேஷன் சக்ரா-V இன் ஒரு பகுதியாகும்.

Advertisement