காவிரி விவகாரம் - சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பு
தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 9ம் தேதி துவங்கி நேற்று(அக்.,11) முடிவடைந்தது. இந்த சட்டசபையில் கடந்த 9ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவிரி விவாகரம் குறித்து தனி தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தில் தமிழக விவசாயிகளின் அடித்தளமாக இருந்துவரும் காவிரி டெல்டா பாசன விவாசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திட வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் வரையறுக்கப்பட்ட அளவிலான காவிரி நீரினை தமிழகத்திற்கு கர்நாடகா அரசு திறந்துவிட மத்திய அரசு உத்தரவிட வேண்டும். இதனை இப்பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாளிலேயே சட்டசபை செயலகத்திலிருந்து தலைமை செயலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்தீர்மானத்தின் நகலை முறைப்படி சிவ்தாஸ் மீனா மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளார்.