வீடியோ: பட்டப்பகலில் BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்த திருடர்கள்
பெங்களூரில் பட்டப்பகலில் பைக்கில் வந்த இருவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு BMW காரின் கண்ணாடியை உடைத்து 13 லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த திருட்டு சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. ஒரு நபர் BMW X5 காரின் கண்ணாடியை உடைத்து, காருக்குள் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தனது கூட்டாளியின் பைக்கில் ஏறி அங்கிருந்து தப்பிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த கார் பெங்களூரு ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமானதாகும். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சர்ஜாபூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.