சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை
சென்னையில் சாலையோரம் இயங்கிவரும் சில பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறியினை கலந்து விற்கப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து பாரிமுனை பகுதியிலுள்ள நரிக்குறவர் குடியிருப்புகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கிருந்த பூனைகள் கழுத்தில் மணிகளை கட்டப்பட்டிருந்தனர். இதனைபார்த்த அதிகாரிகள் வீட்டில் வளர்க்கப்படும் பூனையை திருடிக்கொண்டு வந்திருக்கலாம் என்று சந்தேகித்து 11 பூனைகளை ஏழுகிணறு போலீசார் உதவியுடன் மீட்டுகொண்டு சென்றுள்ளார்கள். மீட்கப்பட்ட 11 பூனைகளும் திருவள்ளூர் மாவட்டம் அம்மம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனியார் விலங்கு பாதுகாப்பு நிறுவனர் ஸ்ரீ ராணியிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து விற்பனை
இதுகுறித்து ஸ்ரீ ராணி கூறுகையில், தான் ஒரு மத்தியஅரசு அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றதாகவும், தற்போது விலங்குகள் பாதுகாப்பு தொண்டு நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் பல பகுதிகளில் நரிக்குறவர்கள் பூனைகளை பிடித்து ஓர் பூனையை ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கருப்பு பூனைகளை பிடித்து அதன் ரத்தத்தை விற்பனை செய்வதாகவும் தகவல்கள் கிட்டியது. இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்பில் பூனைகள் மட்டுமில்லாமல் மாடுகள், குதிரைகள், நாய், ஒட்டகம், கோழி, வாத்து உள்ளிட்டவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.