தேர்தல் விதிமுறைகளை மீறியதற்காக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
செய்தி முன்னோட்டம்
தேமுதிகவின் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அதிகாரி புகார் அளித்ததனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பிரேமலதா விஜயகாந்தின் பிறந்தநாளையும், மகளிர் தினத்தையும் முன்னிட்டு பல நல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
இதற்காக சுமார் 300 மகளிருக்கு இலவசமாக ஆறு மாதம் டெய்லரிங் வகுப்பு பயிற்சி தருவதற்கான டோக்கன் வழங்கப்பட்டது.
இதற்காக பேனரும் வைக்கப்பட்டது.
தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்த அரசியல் கட்சிகள் உரிய அனுமதி பெற வேண்டும். அதனை பிரேமலதா பெறாததால்,அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
#BREAKING || பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
— Thanthi TV (@ThanthiTV) March 19, 2024
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில், கோயம்பேடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை வீதிகளை மீறி தேமுதிக அலுவலகத்தில்… pic.twitter.com/qkAj48A5FY