ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும் மசோதாக்களுக்கு, ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கால தாமதம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு பல நாட்களாக கூறப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2021ம் ஆண்டு முதல் தற்போது வரை 19 மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஆளுநர் ஆர்.என்.ரவி ஓர் பேட்டியில், தான் ஓர் மசோதாவை நிலுவையில் வைத்திருக்கும் பட்சத்தில் அது நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம் என்று கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, இந்தாண்டு துவக்கத்தில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையினை முழுதாக வாசிக்காமல், கலைஞர், பெரியார், முத்தமிழ் அறிஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.
புகார்
முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே தொடரும் மோதல் போக்கு ?
இதனால் திமுக'வினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை முழுவதும் நோட்டிஸ்களை ஒட்டியது குறிப்பிடவேண்டியவை.
இதன் காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இடையே தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு ஆளுநருக்கு எதிராக தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
அதில், 'தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்கள் மற்றும் அரசின் உத்தரவுகளுக்கு ஆளுநர் உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும்' என்று கோரப்பட்டுள்ளது.
மேலும், 'ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.