Page Loader
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி 
காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

திருவண்ணாமலையில் அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து: 7 பேர் பலி 

எழுதியவர் Sindhuja SM
Oct 24, 2023
09:10 am

செய்தி முன்னோட்டம்

திருவண்ணாமலை, அந்தனூர் புறவழிச்சாலை அருகே நேற்று இரவு காரும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். 10 பேருடன் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த டாடா சுமோ, செங்கம் அருகே அரசுப் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது. விபத்து நடந்ததை அடுத்து, காரில் இருந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு உயிரிழநதனர். பேருந்தில் இருந்த சுமார் 10 பயணிகள் காயம் அடைந்தனர். காயமடைந்த அனைவரும் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து செங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

செங்கம்: விபத்தில் 7 பேர் உயிரிழப்பு