
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துவங்கியது அமைச்சரவை கூட்டம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் தற்போது நிகழும் இந்த பரபரப்பான அரசியல் சூழலில், இன்று(ஜூலை.,22) சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலை 10.30 மணியளவில் அமைச்சரவை கூட்டமானது தற்போது துவங்கி நடந்து வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம், தமிழக ஆளுநரின் செயல்பாடுகள், அமைச்சர் பொன்முடி வீட்டில் நடந்த சோதனை, கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம், உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, தமிழக அமைச்சர்கள் வீடுகளில் நுழைந்து சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறையினர் நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற சட்டப்பேரவையினை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியிருந்தது.
ஆலோசனை
மணிப்பூர் கலவரத்தில் 6,000 வழக்குகள் பதிவு என தகவல்
இதனையடுத்து அந்த விவகாரம் குறித்தும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்புள்ளது என்று தெரிகிறது.
இதனிடையே, கலைஞர் நூற்றாண்டு விழாவில் புது திட்டங்கள் அறிவிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
இந்நிலையில், மணிப்பூர் கலவரம் தொடர்பாக தற்போது நடந்து வரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து 6,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தற்போது நடந்து வரும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் முக்கிய உயரதிகாரிகளும் கலந்துக்கொண்டு ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.