கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார்
தெற்கு கோவாவில் பெனாவ்லிம் கடற்கரை பகுதிக்கு சுற்றுலாவாசிகள் அதிகம் செல்வது வழக்கம். இந்த சுற்றலாத்தலத்திற்கு இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக்கின் மனைவி அக்சதா மூர்த்தி, அவரது இரு மகள்கள் மற்றும் அவரது தாயார் சுதா மூர்த்தி ஆகியோர் விடுமுறை நாட்களை கழிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பீலே என பலரால் அழைக்கப்படும் மீனவர் ஒருவர் கூறுகையில், இங்கிலாந்து பிரதமரின் மனைவியை கண்டவுடன் உடனே அடையாளம் கண்டுகொண்டேன். அவர் என்னை அணுகி இங்குள்ள நீர் விளையாட்டுகள் பாதுகாப்பானதா என கேட்டார். அதற்கு நான் 100 சதவீதம் பாதுகாப்பானது என்று கூறினேன் என்று கூறினேன் என்று கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு இனிமையான அனுபவம் என உரைத்த பீலே
மேலும் பீலே கூறியதாவது, நீங்கள் நீர் விளையாட்டை விளையாட விரும்பினால் உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் பாதுகாப்பாக அழைத்து செல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது. இவர்களின் இந்த உரையாடல்கள் சிலரால் வீடியோ எடுக்கப்பட்டது. பின்னர், அவர்கள் எங்கள் விரைவு படகுகளில் ஏறும் முன்னர், இங்கிலாந்தில் நிறைய கோவாவாசிகள் உள்ளனர். அவர்களை பத்திரமாக உள்ளனரா என பார்த்துக்கொள்ளும் படி கேட்டு கொண்டேன் என்றும் பீலே தெரிவித்தார். அதற்கு அவர்கள் ஆகட்டும் என கூறியதாக பீலே கூறுகிறார். தொடர்ந்து இந்த சந்திப்பானது தனக்கு ஏற்பட்ட ஓர் இனிமையான அனுபவம் எனவும் பீலே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.