Loading...
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்; பிரதமர் மோடியுடன் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை

எழுதியவர் Venkatalakshmi V
Sep 10, 2026
01:11 pm

செய்தி முன்னோட்டம்

புதுடெல்லி பாரத் மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டின் இடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் முக்கிய இருதரப்பு பேச்சுவார்த்தை செப்டம்பர் 12 நடைபெற உள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாட்டு படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பிறகு, இரு தலைவர்களும் அதிகாரப்பூர்வமாக நேரடியாகச் சந்தித்துப் பேசவுள்ளது இதுவே முதல் முறையாகும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்ளிட்ட பிரிக்ஸ் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்களும் டெல்லி வருகை தரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய அம்சங்கள்

சந்திப்பின் முக்கிய அம்சங்கள்

2019-இல் மாமல்லபுரத்தில் நடந்த சுமுக சந்திப்பிற்குப் பிறகு, சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியாவிற்கு வருகை தருவது இதுவே முதன்முறை.

இந்த சந்திப்பின் போது, எல்லைக்கட்டுப்பாட்டு கோடு (LAC) பகுதியில் இருநாட்டு படைகளும் விலகியதை தொடர்ந்து, எல்லையில் அமைதியை பராமரிப்பது குறித்த ஆலோசனைகள் நடைபெறும்.

அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில் சீன ராணுவத்தின் நகர்வுகள் மற்றும் பெயர் மாற்றங்கள் குறித்து இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் வரி விதிக்கீடு கொள்கைகள் மற்றும் சர்வதேச பொருளாதார சூழலுக்கு மத்தியில், இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகச் சீரமைப்பு குறித்து விவாதிக்கப்படலாம்.

ADVERTISEMENT