Page Loader
பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு
இருசக்கர வாகன ஓட்டிகள் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்ல தடை விதித்தது கேரளா அரசு

பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை - அதிரடி காட்டிய கேரளா அரசு

எழுதியவர் Siranjeevi
Apr 12, 2023
12:54 pm

செய்தி முன்னோட்டம்

கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வழங்கவும், சமையல் எரிவாயு சிலிண்டரை வாகனத்தில் எடுத்து செல்லவும் அதிரடியாக தடை விதித்துள்ளது. கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஓடும் ரயிலில் பயணிகளை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதில் 9 பேர் காயமடைந்து. 3 பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடூரமான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தன. குற்றத்தில் ஈடுப்பட்ட நொய்டாவை சேர்ந்த ஷாருக் ஷைபி என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், ரயில் நிலையங்களில் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் பாட்டில் பெட்ரோலுக்கு தடை

கேரளாவில் பாட்டிலில் பெட்ரோல் வாங்கி செல்ல தடை விதித்துள்ளது

தொடர்ந்து இனி பெட்ரோல் பங்குகளில் யாரும் பாட்டிலில் பெட்ரோல் வழங்க கூடாது எனவும் இதனை மீறுவோருக்கு அபராதமும் சிறை தண்டனையும் வழங்கப்படும் என கேரளா மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி நடவடிக்கையால் இனி வாகனங்களில் செல்லும் யாரும் பெட்ரோல் தீர்ந்துவிட்டால் பாட்டிலை பயன்படுத்தக்கூடாது எனவும், வாகனத்தை தள்ளிக்கொண்டே சென்று தான் பெட்ரோல் வாங்க வேண்டும் என எச்சரித்துள்ளது. மேலும், வீட்டு சமையல் சிலிண்டர்களை, கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் எடுத்துச் செல்லவும், அரசு தடைவிதித்துள்ளது.