Page Loader
கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி
கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி

கேரளாவில் 100க்கு 97மதிப்பெண்கள் எடுத்த 108 வயதுடைய மூதாட்டி

எழுதியவர் Nivetha P
Apr 10, 2023
07:10 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கன்னி, இவருக்கு வயது 108. இவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புத்தேடி கேரளா சென்றுள்ளார். கேரள மாநிலம் வண்டன்மேடு பகுதியில் உள்ள ஓர் ஏலத்தோட்டத்தில் வேலைசெய்துள்ளார். தனது கணவன் உயிரிழந்தப்பின்னர் தனது 2 மகன்களையும், 3 மகள்களையும் நல்லமுறையில் திருமணம் செய்து கொடுத்துள்ளார். தற்போது இவருக்கு பேரன், கொள்ளுப்பேரன்-பேத்திகள் என இருந்தும் 5 தலைமுறைகளை கடந்து இவர் தோட்டவேலைக்கு தினமும் சென்று வருகிறார். 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள கமலக்கன்னிக்கு தான் நன்றாக படித்திருந்தால் இன்னமும் தனது குழந்தைகளை வசதியாக வாழ வைத்திருக்கலாமே என்ற எண்ணம் இருந்துள்ளது. இந்தியாவிலேயே கல்வியறிவு பெற்றவர்கள் அதிகமுள்ள மாநிலம் கேரளா தான்.

குடும்ப வறுமை

108 வயதிலும் படித்து மற்றோருக்கு சான்றாக மாறிய கமலக்கன்னி

தமிழகத்தில் அறிவொளி இயக்கம் போல கேரளாவில் சம்பூர்ணா சாஸ்த்ரா என்னும் எழுத்தறிவு திட்டம் உள்ளதாம். அதன்மூலம் வயது முதிர்ந்தோரும் கல்வியறிவினை பெற முடியும். எழுத்து பயிற்சி, வாசிக்கும்திறன், கையெழுத்து பயிற்சி ஆகியவற்றை கற்றுக்கொடுக்கிறார்கள். இதில் கமலக்கன்னியும் சேர்ந்து படித்துள்ளார். கல்வியின்மீது அதீத ஆர்வம் கொண்ட அவர் இந்தப்படிப்பினை முடித்து தேர்வினை எழுதி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றுத்தன்னை போன்றோருக்கு சான்றாக மாறியுள்ளார். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டஇவர், தமிழ்-மலையாளம் ஆசிய மொழிகளிலும் அசாத்திய திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். 2ம்வகுப்பு வரை படித்த என்னால் குடும்ப வறுமையால் மேற்கொண்டு படிக்கமுடியவில்லை. எனது குழந்தைகள், பேரன்-பேத்திகள் அனைவரும் பள்ளி,கல்லூரிக்கு சென்றுப்படிக்கையில் நம்மால் இதுபோல் படிக்க முடியவில்லையே என்னும் வருத்தம் இருந்தது. கல்வியறிவு இல்லையெனிலும் கேள்விஞானம் உள்ளது என்று கூறியுள்ளார்.