
பஞ்சாப் முதலமைச்சர் வீடு அருகே வெடிகுண்டு!
செய்தி முன்னோட்டம்
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சரான பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த முதல்வர் பகவந்த் மான் ஆட்சி செய்து வருகிறார்.
சண்டிகரில் இருக்கும் இவரது வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்துளை கிணறு ஆபரேட்டர் ஒருவரால் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கபட்டது என்று கூறப்படுகிறது.
இதே பகுதியில் தான் ஹரியானா மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள் பயன்படுத்தும் ராஜேந்திரா பூங்கா என்ற இடமும் இருக்கிறது.
இந்த தகவல் அறிந்து விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் கண்டெடுக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்க செய்தனர்.
இது குறித்து சண்டிகர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ட்விட்டர் அஞ்சல்
வெடிகுண்டு கண்டெக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ:
🔴 #BREAKING | Bomb Found Near Punjab Chief Ministers House In Chandigarh https://t.co/G1EoIlGf9h pic.twitter.com/WIvmetBMub
— NDTV (@ndtv) January 2, 2023