தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக
செய்தி முன்னோட்டம்
இந்தாண்டு இறுதியில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.
அதன்படி தேர்தல் நடத்தப்படும் தேதியினை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, நடக்கவிருக்கும் தேர்தல் வியூகங்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்வு குறித்து பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டமானது பிரதமர் மோடி தலைமையில் நேற்று(ஆகஸ்ட்.,16) நடந்தது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தலில் போட்டியிடும் தங்கள் வேட்பாளர்களின் பட்டியலினை பாஜக வெளியிட்டுள்ளது.
அதன்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் 90 உறுப்பினர்கள் கொண்டுள்ள நிலையில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு 21 வேட்பாளர்களின் பெயர் கொண்ட பட்டியலினை பாஜக அறிவித்துள்ளது.
தேர்தல்
5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெற முயற்சிக்கும் பாஜக
அதனைத்தொடர்ந்து, மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் 230 உறுப்பினர்கள் உள்ள நிலையில் 39 வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை பாஜக அறிவித்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
முன்னதாக பாஜக இந்தாண்டு துவக்கத்தில் நடைபெற்ற கர்நாடகா சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.
இதனால் அடுத்து நடக்கவிருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் வெற்றிபெறவே பாஜக தேர்தல்தேதி அறிவிப்பிற்கு முன்னரே வேட்பாளர் பட்டியலினை வெளியிட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அதன்படி, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டசபைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ளனர் என்று தெரிகிறது.
குறிப்பாக, மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நடக்கும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.