திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் சமூகக் குழுக்களைத் கணக்கெடுத்த அரசாங்கம், "மூன்றாம் பாலின" உறுப்பினர்களை தனி ஜாதியாகக் கணக்கிட்டது மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒருவரின் பாலின அடையாளத்தை சாதியாகக் கருத முடியாது என்று பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
பீகாரில் உள்ள சாதிகளை இப்போது எண் குறியீடுகளைப் பயன்படுத்தி அடையாளம் காணலாம். ஏப்ரல்-15 முதல் மே-15 வரை நடக்கும் கணக்கெடுப்புக்கு உதவும் வகையில், பீகாரில் உள்ள ஒவ்வொரு சாதிக்கும் ஒரு எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.
பிராமண சாதிகளின் துணைப்பிரிவுகள் பிராமணர்கள் என்ற ஒரே சமூக அமைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. பிராமணர்களின் சாதிக் குறியீடு 126 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், ராஜபுத்திர சாதி குறியீடு 169 என்றும் பூமிஹார் சாதி குறியீடு 142 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா
இது திருநர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்: பிரசாத்
இந்த வரிசையில் "மூன்றாம் பாலினம்" என்று குறிப்பிடப்படும் திருநர்கள் 22ஆல் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுவரை, 215 சாதிகளுக்கு குறியீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், "மூன்றாம் பாலினமும்" தனி சாதி என்ற அடிப்படையில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய தொஸ்தானாசஃபர் என்ற இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் நிறுவனர்-செயலாளர் ரேஷ்மா பிரசாத், "ஒரு மனிதனின் பாலின அடையாளம் எப்படி அவர்களின் சாதியாக மாறும்? 'ஆண்' அல்லது 'பெண்' என்பதை சாதியாகக் கருதலாமா... அதே போல் 'திருநர்களை' சாதியாக எப்படி கருதுவது?" என்று கூறினார்.
இந்த நடவடிக்கை திருநர்களுக்கு எதிரான பாகுபாட்டைத் தடுக்கும் திருநர்(உரிமைகள் பாதுகாப்பு) விதிகளுக்கு எதிரானது என்றும் பிரசாத் கூறியுள்ளார்.
மேலும், இது குறித்து பீகார் முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார்.