பீகார் சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
செய்தி முன்னோட்டம்
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ் குமார் அரசு வெற்றி பெற்றுள்ளது.
முன்னதாக கடந்த ஜனவரி இறுதியில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார், இந்தியா பிளாக் கூட்டணியை விட்டு பிரிந்து, பாஜக கூட்டணியில் இணைந்தார்.
இதனை தொடர்ந்து பாஜக உடன் கூட்டணி அமைத்து, ஜனவரி மாதம் 28ஆம் தேதி பதவியேற்றார் நிதிஷ் குமார்.
அதன் தொடர்ச்சியாக, பீகார் மாநில சட்டப்பேரவையில் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அதன்மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. அதில், 130 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி நிதிஷ்குமாரின் அரசு வெற்றி பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
நம்பிக்கை வாக்கெடுப்பில் நிதிஷ்குமார் வெற்றி
#BREAKING | பீகார் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!#SunNews | #NitishKumar pic.twitter.com/QsSCpjDjO1
— Sun News (@sunnewstamil) February 12, 2024