
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா
செய்தி முன்னோட்டம்
ராஜ்பவனில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் ராஜினாமா கடிதம் அளித்ததையடுத்து, பீகார் முதல்வர் பதவியை நிதீஷ்குமார் இன்று ராஜினாமா செய்தார்.
இன்று காலை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சட்டமன்ற கூட்டத்தில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
ராஜினாமா கடிதத்தை அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ்குமார், பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணியை கலைக்குமாறு ஆளுநரிடம் கேட்டுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
நிதிஷ் குமார் , 'இண்டியா' கூட்டணியை விடுத்து, பாஜக கூட்டணியில் இணைய இருப்பதாக சில நாட்களாகவே செய்திகள் பரவி வந்த நிலையில், அவர் இன்று ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்தபடியாக அவர் பாஜக கூட்டணியுடன் இணைந்து பீகாரில் புதிய அரசாங்கத்தை அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ட்விட்டர் அஞ்சல்
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா
Bihar CM and JD(U) president Nitis Kumar meets Governor at Raj Bhavan; tells him - We have decided to sever ties with the mahagathbandhan in the state. pic.twitter.com/z8sPH6V2FD
— ANI (@ANI) January 28, 2024