Page Loader
பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்
40 பெண்களுக்கு ஒரே கணவர் பெயரை பதிவு செய்துள்ளனர்

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு - 40 பெண்களுக்கும் ஒரே கணவரா? அதிர்ச்சியில் அதிகாரிகள்

எழுதியவர் Siranjeevi
Apr 26, 2023
03:53 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்டது. பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பில் 40 பெண்களுக்கும் ஒரே கணவர் என பெயரை பதிவு செய்துள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கணக்கீட்டிற்காக 500 கோடி ரூபாய் நிதியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதற்காக அரசாங்க ஊழியர்கள் வீடு வீடாக கணக்கெடுத்து வருகின்றனர். அப்போது அர்வாலி பகுதியில் வசிக்கும் 40 பெண்கள் ஒரே கணவரின் பெயரை பதிவு செய்துள்ளனர். அவரின் பெயர் ரூப்சந்த் எனக்கூறியுள்ளனர். பல குழந்தைகளும் தந்தை பெயர் ரூப்சந்த் எனக்கூறியுள்ளனர்.

பீகார் ஜாதிவாரி கணக்கெடுப்பு

40 பெண்களுக்கும் ஒரே கணவர் - உண்மை நிலவரம் என்ன?

மேலும் 23 பெண்களின் ஆதார் அட்டையிலும் ரூப்சந்த் என கணவர் பெயரை பதிவிட்டுள்ளனர். உண்மையில் அர்வாலிவார்டு வசிப்பவர்கள் சிவப்பு விளக்கு பகுதியை சேர்ந்தவர்கள். பல ஆண்டுகளாகவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பணம் தருபவர் தான் ரூப்சந்த் என அந்த பெண்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கையில் ரூப்சந்த் என்பவர் இல்லை என்பதும், அங்கு வசிப்பவர்கள் ரூப் என்றால் பணம், ரூபாயை கணவராக கருதுகின்றனர். அதனால் தான் அனைவரும் கணவர் பெயரை ரூப்சந்த் எனக்கூறுவதாக தெரிவிக்கிறார்கள்.