Page Loader
மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு 
ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

மோர்பி பால விபத்து: நகராட்சி நிர்வாகத்தை கலைத்தது குஜராத் அரசு 

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2023
10:01 am

செய்தி முன்னோட்டம்

மோர்பி நகராட்சியை குஜராத் அரசு நேற்று(ஏப் 11) கலைத்தது. மோர்பி பால விபத்திற்கு எதிராக எடுக்கப்படும் அடுத்த நடவடிக்கை இதுவாகும். குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சியின்(பாஜக) கட்டுப்பாட்டில் இருந்த குடிமை அமைப்பு கலைக்கப்பட்டது. அக்டோபர் 30 அன்று குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் இடிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 135 பேர் கொல்லப்பட்டு, பலர் காயமடைந்தனர். இந்த விபத்து நடந்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு குஜராத் அரசு இந்த முடிவை எடுத்திருக்கிறது. மோர்பி நகரில் இருக்கும் தொங்கு பாலம், நகராட்சியுடன் கையெழுத்தான ஒப்பந்தத்தின் கீழ் ஓரேவா குழுமத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது.

details 

ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை அலட்சியப்படுத்திய நிர்வாகம் 

பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து மோர்பி நகராட்சிக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வந்தனர். நகராட்சி நிர்வாகம் தனது பணிகளைச் செய்யத் தவறியதற்காக 'ஏன் நிர்வாகத்தை கலைக்கக்கூடாது' என்று கேள்வி எழுப்பிய மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை, ஜனவரி மாதம் நகராட்சிக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான விசாரணையில், குடிமை அமைப்பின் பல குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பாழடைந்த பாலத்தின் நிலை குறித்து ஓரேவா குழு விடுத்த எச்சரிக்கைகளை நகராட்சி நிர்வாகம் கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. 2018 மற்றும் 2020 க்கு இடையில் பாலம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டால் கடுமையான விபத்து ஏற்படும் என்று எச்சரித்த ஓரேவா குழு, பல கடிதங்களை நகராட்சிக்கு எழுதியுள்ளது.