
விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா: சந்தைக்கு வரும் தடுப்பு மருந்து!
செய்தி முன்னோட்டம்
மூக்கு வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்திற்குகான விலையை பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று அறிவித்தது.
'இன்கோவாக்' என்ற இந்த மருந்து, Cowin தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.
இதன் விலை, தனியாருக்கு 800 ரூபாயாகவும்(GST உட்பட) அரசாங்கத்திற்கு 325 ரூபாயாகவும்(GST இல்லாமல்) இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி மாத கடைசியில் இருந்து இந்த மருந்து எல்லோருக்கும் கிடைக்கப்படும்.
ஏற்கனவே, கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகளை எடுத்து கொண்டவர்கள், பூஸ்டர் மருந்ததாக இந்த தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மூக்கு வழியாக போடப்படும் இந்த தடுப்பு மருந்து இந்திய மருத்துவத்தின் ஒரு மைல் கல்லாக கருதப்படுகிறது.
இந்த மருந்தை 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் எடுத்துக்கொள்ளலாம்.
28 Dec 2022
கொரோனா பாதிப்பு அதிகரிப்பு:
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 66.25 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் வாராந்திர கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது. முந்தைய வாரம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,103 ஆக இருந்த நிலையில் கடந்த வாரம் இது 1,219 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், டெல்லி, தெலங்கானா உட்பட 16 மாநிலங்கள் மற்றும் ஒன்றியங்களில் கொரோனா பாதிப்பு முன்பைவிட அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களைத் தாக்கி இருப்பது எந்த வகைக் கொரோனா என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரி மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று, மதுரையில் 2 பேருக்கும் சென்னையில் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் நால்வரும் சீனா மற்றும் துபாயில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.