
வாக்குவாதம்: ஒருவரை காரில் 1 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற பெண்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு ஞானபாரதி நகரில் டாடா நிக்சன் மற்றும் மாருதி ஸ்விப்ட் ஆகிய இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி (ஜன:20) விபத்துக்குள்ளானது.
டாடா நிக்சன் காரை பிரியங்கா என்ற பெண் ஓட்டி வந்தார். ஸ்விஃப்ட் காரை ஓட்டி வந்தவர் தர்ஷன் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
கார் மோதியதைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்நேரம், பிரியங்கா தன் காரை கிளப்பி இருகிறார்.
அவரை தடுக்க தர்ஷன், பிரியங்கா காரின் மேல் குதிக்க, பிரியங்கா சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை தர்ஷனை காரில் இழுத்து சென்றுள்ளார்.
பிரியங்கா காரை நிறுத்தியதும் தர்ஷனும் அவரது நண்பர்களும் சேர்ந்து பிரியங்காவின் காரை அடித்து நொறுக்கினர்.
தற்போது இருதரப்பினரும் ஒருவரின் மேல் மற்றொருவர் புகாரளித்திருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ:
#WATCH | Bengaluru Woman Drags Man On Car's Bonnet For 1 km After Crash https://t.co/vOlsMbeERp pic.twitter.com/dkvXR9Qz6o
— NDTV (@ndtv) January 20, 2023