Page Loader
கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை
கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை

கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை

எழுதியவர் Nivetha P
Apr 01, 2023
12:31 pm

செய்தி முன்னோட்டம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் துவங்கும். விடுமுறை தினங்களையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அங்கு அலைமோதும். அவர்களுக்காக ஊட்டியில் கோடை விழா, கண்காட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வரும் காரணத்தினால் கோடை சீசனில் தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பிற்கு நிலையான தடை உத்தரவு கடந்த சில வருடங்களாக அமல்படுத்தப்படுகிறது. அதன்படி இன்று(ஏப்ரல்.,1) முதல் தாவரவியல் பூங்கா உள்பட மாவட்டத்தில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்பிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மலைகளின் அரசி

சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவே படப்பிடிப்பிற்கு தடை

இந்த தடை குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வழக்கத்தை விட அதிகளவில் வருகை தருவார்கள். மேலும் நடைபாதையோரம் மலர் பாத்திகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளது. அந்த செடிகளுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்கவும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய 3 மாதங்கள் சினிமா படப்பிடிப்பிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். மலைகளின் அரசி என கூறப்படும் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தேயிலை தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் இங்கு படையெடுப்பது குறிப்பிடத்தக்கது.