
அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா!
செய்தி முன்னோட்டம்
அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி அயோத்தி ராமர் கோவில் திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள சர்ச்சைக்குரிய இடமான அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் 2019ஆம் ஆண்டு அனுமதி அளித்தது.
ராமர் கோவில்-பாபர் மசூதி பிரச்சனைகளைத் தீர்க்க, மசூதி கட்டுவதற்கு வேறொரு இடத்தில் இடமளிக்க வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
இதற்கு, அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பு வழங்கினார்.
இதனையடுத்து, 2020ஆம் ஆண்டு ராமர் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடத்தப்பட்டது. இதை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், இந்த கோவில் அடுத்த வருடம் ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
ஜனவரி 1, 2024 அன்று ராமர் கோவில் திறக்கப்படும்: அமித்ஷா!
“ஜனவரி1,2024-இல்அயோத்தியில் ராமர்கோவில்திறக்கப்படும்.” -அமித் ஷா pic.twitter.com/phFgUq4W1l
— BBC News Tamil (@bbctamil) January 5, 2023