LOADING...
அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா
அயோத்தி ராமர் கோவில் றக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா

அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு புகார்: அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ராஜினாமா

எழுதியவர் Sekar Chinnappan
Jun 26, 2026
02:54 pm

செய்தி முன்னோட்டம்

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ராமர் கோவிலுக்குப் பக்தர்கள் வழங்கிய காணிக்கை நிதியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் மற்றும் அறங்காவலர் அனில் மிஸ்ரா ஆகியோர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிதி முறைகேடு தொடர்பாக முதற்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் தார்மீகப் பொறுப்பேற்று இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதற்கட்ட விசாரணை

லக்னோ சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முதற்கட்ட விசாரணை

அயோத்தி ராமர் கோவிலில் பக்தர்களின் காணிக்கை மூலம் பெறப்பட்ட நிதியில் சுமார் 7 கோடி ரூபாய் முதல் 7.5 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ பவன் பாண்டே குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அறக்கட்டளையின் வேண்டுகோளின்படி உத்தரப் பிரதேச அரசு கடந்த ஜூன் 14 ஆம் தேதி மூன்று உறுப்பினர்கள் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த குழு சமர்ப்பித்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையிலேயே தற்பொழுது காவல்துறை நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது.

வழக்குப் பதிவு

பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

சிறப்புப் புலனாய்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், அயோத்தி ராமர் ஜென்மபூமி காவல் நிலையத்தில் எட்டு நபர்களுக்கு எதிராகப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் நம்பிக்கை துரோகம், முறைகேடு மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனுகல்ப் மிஸ்ரா, லவ்குஷ் மிஸ்ரா, அவினாஷ் சுக்லா, தின்னு யாதவ், மனிஷ் யாதவ் உள்ளிட்ட நபர்களைக் காவல்துறை தற்பொழுது கைது செய்து விசாரித்து வருகிறது.

Advertisement

யோகி ஆதித்யநாத்

எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் கடும் கண்டனம்

இந்த விவகாரம் குறித்து தியோரியாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அரசியல் லாபத்திற்காகப் பக்தர்களின் நம்பிக்கையைக் கொச்சைப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போக்கைக் கடுமையாகக் கண்டித்தார். முன்பு ராமர் வாழ்ந்ததற்கே சான்றில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களை நிறுத்தியவர்களும், ராமநாமம் சொன்னவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களும்தான் இன்று ஆன்மீக நம்பிக்கையைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று அவர் சாடினார்.

Advertisement

நடவடிக்கை உறுதி

தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை உறுதி

பொதுமக்களின் ஆன்மீக நம்பிக்கைக்குக் களங்கம் விளைவிப்பவர்கள் எவராக இருந்தாலும், அவர்களின் மீது அரசு எவ்விதப் பாரபட்சமுமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார். உண்மை என்ன என்பது இந்த முழுமையான விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வரும் என்றும், ஆதாரம் உள்ளவர்கள் அதனைப் புலனாய்வுக் குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணங்களுக்காகப் பொய்யான அறிக்கைகளை வெளியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement