சென்னை புளியந்தோப்பில் வீட்டுக்குள் புகுந்த ஆஸ்திரேலிய நட்சத்திர ஆந்தை
சென்னை புளியந்தோப்பு, கே.பி.பார்க் பகுதியில் ஓர் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு உள்ளது. அதில் ஈ-பிளாக் 8வது மாடியில் பால்றாஜ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் குளியலறையில் நேற்று(மார்ச்.,21) காலை ஆந்தை ஒன்று இருப்பதை அவர் பார்த்துள்ளார். அதனையடுத்து தனது வீட்டில் ஒரு ஆந்தை உள்ளது என்பது குறித்து பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறிய தகவலையடுத்து போலீசார் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளித்ததாக கூறப்படுகிறது. இது போன்று பறவைகள் மற்றும் ஏதேனும் விலங்குகளை பிடிக்க பெரும்பாலும் தீயணைப்பு துறையும், வனத்துறையினரும் தான் அனுப்பப்படுவார்கள் என்பது குறிப்பிடவேண்டியவை.
கிண்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைப்பு
அதன்படி பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் இருந்து இவ்வாறு ஓர் குடியுருப்பில் ஆந்தை இருப்பது குறித்த தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் களத்தில் இறங்க தயாராகியுள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை தீயணைப்பு நிலையத்தின் வீரர்கள் பால்ராஜிடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். அதன் பின்னர் அவர்கள் பால்றாஜ் வீட்டிற்குள் புகுந்து குளியலறையில் இருந்த ஆந்தையினை பிடித்துள்ளனர். ஆந்தையை பிடித்த பின்னர் து ஆஸ்திரேலியாவில் உள்ள அரிய வகை ஆந்தை என்பது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் காணப்படும் இந்த அரிய வகை ஆந்தை நட்சத்திர ஆந்தை என கூறப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் பிடிபட்ட அந்த அரிய வகை ஆந்தையினை தீயணைப்பு வீரர்கள் கிண்டி வனத்துறையிடம் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.