Loading...
அசாம் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 75 ஆக உயர்வு; நிவாரணத் தொகை ₹9 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு
அசாம் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 75 ஆக உயர்வு

அசாம் வெள்ளப்பெருக்கு: உயிரிழப்பு 75 ஆக உயர்வு; நிவாரணத் தொகை ₹9 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Jul 29, 2026
12:02 pm

செய்தி முன்னோட்டம்

அசாம் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆக உயர்ந்துள்ளது. சிவசாகர் மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்த நிலையில், நிலைமையை கையாள அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான அரசு பல்வேறு முக்கிய நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ₹9 லட்சமாக உயர்த்த அசாம் அரசு முடிவு செய்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ₹4 லட்சத்துடன், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து (CMRF) கூடுதலாக ₹5 லட்சம் சேர்த்து மொத்தம் ₹9 லட்சம் வழங்கப்படும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 1 மாதத்திற்கு மேலாக உடல்கள் மீட்கப்படாதவர்களின் குடும்பங்களுக்கும் இதே அளவு நிவாரணத் தொகை வழங்கப்படும்.

நிவாரண உதவிகள்

பிற முக்கிய நிவாரண உதவிகள்

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிவசாகர், ஜோர்ஹாட் மற்றும் கோலாகாட் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு வீட்டு உபயோகச் செலவுகளுக்காக ₹15,000 நேரடியாக அவர்களின் வங்கிச் கணக்கில் செலுத்தப்படும்.

பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான நிதி உதவித் தொகை வழக்கமான ₹1,250-க்கு பதிலாக ₹2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ₹1,000, இளங்கலை மாணவர்களுக்கு ₹3,000, முதுகலை மாணவர்களுக்கு ₹5,000 வழங்கப்படும். அதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு புத்தகங்கள் வாங்க வழங்கப்படும்.

வெள்ளத்தில் சேதமடைந்த மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களைப் பெற கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

வெள்ள சேதம்

தற்போதைய வெள்ள நிலைமை

அசாமில் 7 மாவட்டங்களில் உள்ள 622 கிராமங்களை சேர்ந்த 3.32 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சாராடியோ (1.42 லட்சம்) மற்றும் சிவசாகர் (97,074) ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

ராணுவம், விமானப்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் (NDRF & SDRF) தொடர்ந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

81 நிவாரண முகாம்களில் 32,477 பேர் தங்கியுள்ளனர்.

சுமார் 45,341 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆகஸ்ட் 3 முதல் சேதமடைந்த வீடுகள், பயிர்கள் மற்றும் கால்நடைகள் குறித்த விரிவான கணக்கெடுப்பு தொடங்கப்பட்டு, தகுதியுள்ள குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT