கைதுக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வாபஸ் பெற்றார். கீழ் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தின் மனுவுடன் தங்களின் மனு முரண்படுவதாகவும், முதலில் வழக்கறிஞர் குழு அதை எதிர்த்துப் போராடும் என்றும் அரவிந்த் கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். முன்னதாக, டெல்லி முதல்வரின் கைதுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. அதனை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி எம்.எம்.சுந்திரேஷ் மற்றும் நீதிபதி பேலா திவேதி ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரிக்க திட்டமிடப்பட்டது.
வீட்டுக்காவலில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் குடும்பத்தார்
டில்லி அமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி, அரவிந்த் கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கட்சி கவலைப்படுவதாக தெரிவித்தார். "அரவிந்த் கெஜ்ரிவால் Z+ பாதுகாவலர். அவர் மத்திய அரசின் ED இன் காவலில் இருக்கிறார்," என்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார். அதோடு, பிரதமர் நரேந்திர மோடி எதிர்க்கட்சிகளை முடக்க விரும்புகிறார் என குற்றம் சாட்டினார். கெஜ்ரிவாலின் குடும்பத்தினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், டெல்லி முதல்வரின் பெற்றோரை கூட ஆம் ஆத்மி கட்சியால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் ஆம் ஆத்மியின் தலைவர் கோபால் ராய் கூறினார். கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
வலுக்கும் கண்டனங்கள்
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கெஜ்ரிவாலுடன் தொலைபேசியில் பேசியதாகவும், டெல்லி முதல்வரின் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க காலை 10 மணிக்கு அவரது இல்லத்துக்குச் செல்ல உள்ளதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளார். இவரின் கைதை பஞ்சாப் முதலமைச்சர், காங்கிரஸ் கட்சியின் தலைவர் உள்ளிட்ட பலரும் எதிர்த்துள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதிற்கு தமிழகத்தில் திமுக சார்பில், தயாநிதி மாறன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோபால் ராய், தில்லி சுற்றுச்சூழல் அமைச்சரும், அவரது சகா அதிஷி மற்றும் கட்சியின் எம்பி சந்தீப் பதக் ஆகியோரும் கெஜ்ரிவால் கைது "ஜனநாயகத்தின் கொலை" என்றும் "சர்வாதிகாரத்தின் அறிவிப்பு" என்றும் கூறினர்.