NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 14, 2024
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    மதுபான கொள்கை விவகாரத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

    டெல்லி மதுபான கொள்கையை இயற்றி நடைமுறைப்படுத்தும் போது பணமோசடி நடந்தததாக ஆம் ஆத்மி தலைவர்களிடம் பல நாட்களாக விசாரணை நடந்து வருகிறது.

    மணீஷ் சிசோடியா போன்ற சில முக்கிய தலைவர்கள் இந்த விவாகரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த பணமோசடி வழக்கு விசாரணைக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை ஏற்கனவே 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

    கடைசியாக பிப்ரவரி 2ஆம் தேதி அவர் ஐந்தாவது சம்மனை நிராகரித்தார்.

    இது தொடர்பாக அமலாக்க இயக்குனரகம் டெல்லி நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளது.

    டெல்லி

    வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக வேண்டுகோள் 

    அந்த புகாரை பெற்ற டெல்லி நீதிமன்றம் வரும் 17ஆம் தேதி அவரை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 19 மற்றும் ஜனவரி 31 ஆகிய தேதிகளுக்கான சம்மன்களையும் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் புறக்கணித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை இன்று 6வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

    வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குனரகம் கெஜ்ரிவாலிடம் கேட்டு கொண்டுள்ளது.

    இதற்கு முன்பு அமலாக்க இயக்குனரகத்தின் சம்மனை பெற்ற கெஜ்ரிவால், விசாரணைக்கு ஒத்துழைக்கத் தான் தயாராக இருப்பதாகவும், ஆனால், சம்மன் நோட்டீஸ் சட்டவிரோதமாக அனுப்பப்பட்டது எனவும் தெரிவித்திருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    டெல்லி

    டெல்லி குண்டுவெடிப்பு: இந்தியாவில் உள்ள தனது மக்களுக்கு இஸ்ரேல் அறிவுரை  இஸ்ரேல்
    டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு, சிசிடிவியில் சிக்கிய 2 சந்தேக நபர்கள்- தகவல் இஸ்ரேல்
    கொரோனா அறிகுறிகள் குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள்  ஜே.என்.1 வகை
    அயோத்தியில் புதிய விமான நிலையத்திற்கு மகரிஷி வால்மீகியின் பெயர் சூட்டப்படுகிறது- தகவல் அயோத்தி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    மதுபான ஊழலில் கிடைத்த பணத்தை கோவா பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய ஆம் ஆத்மி: ED கோவா
    டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம்: பாஜக பெரும் போராட்டம் இந்தியா
    அரவிந்த் கெஜ்ரிவால் அமைச்சரவையில் இரு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு டெல்லி
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025