பெண்கள் மற்றும் சமயங்கள் குறித்து சர்ச்சைப் பேச்சு! திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்
செய்தி முன்னோட்டம்
சைவ, வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவ சமயங்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார். இந்த பேச்சுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும், அரசியல் கட்சிகளிடமிருந்தும் பலத்த எதிர்ப்புகளும் கண்டனங்களும் எழுந்தன.
உத்தரவு
தனிநபர் புகார் மனுவும் நீதிமன்ற உத்தரவும்
மதரீதியாக வெறுப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் சமய உணர்வுகளைப் புண்படுத்துதல் போன்ற பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தனிநபர் புகார் மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால், பொன்முடிக்கு எதிராக நீதிமன்றம் தற்போது பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
அவரை செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் கைது செய்து ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர், எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டு பின்னர் பின்னர் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது திமுகவைச் சேர்ந்த மற்றொரு தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
பொன்முடியை கைதுசெய்து ஆஜர்படுத்த உத்தரவு#DMK | #Ponmudy pic.twitter.com/oqc9XgZewW
— PttvOnlinenews (@PttvNewsX) August 6, 2026