"செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை சேர்ந்த சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதி செய்ததாக, அமெரிக்காவால் குற்றம் சாட்டப்பட்ட நிகில் குப்தாவின் குடும்பத்தை, அவரின் விடுதலைக்காக செக் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போது செக் குடியரசில் சிறையில் உள்ள குப்தா, அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக, X என அறியப்படும் அவரது குடும்ப நபர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் X, குப்தா சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
2nd card
இந்திய நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை
இந்த விவகாரம் இந்திய வெளியுறவுத் துறைக்கு, மிக முக்கியமான விஷயம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதிபதி சஞ்சீவ் கண்ணா முதலில் மனுதாரரை "இந்தியாவுக்கு வெளியே உள்ள நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள்" என்று உத்தரவிட்டார்.
மற்றொரு நாட்டில் கைது செய்யப்பட்டவர் தொடர்பான விவகாரங்களில், இந்திய உச்ச நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.
"கைது செய்யப்பட்டவர் வழக்கில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை. கைது செய்யப்பட்டதில் சட்ட மீறல்கள் இருந்தால் அந்த நாட்டின் நீதிமன்றத்தை அணுக வேண்டும்" என கூறி வழக்கை, அடுத்த மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
மேலும் இந்த மனுவின் நகலை, மத்திய அரசுக்கு அனுப்பவும் நீதியரசர் அறிவுறுத்தினார்.
3rd crad
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் என்ன குற்றம் சாட்டப்பட்டது?
செக் குடியரசு நாட்டில் தான் கைது செய்யப்பட்டது பல்வேறு அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என, X என அறியப்படும் தனது குடும்ப நபர் மூலம் உச்சநீதிமன்றத்தில் இன்று குப்தா மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தான் சரியான முறையில் கைது செய்யப்படவில்லை எனவும், தான் கைது செய்யப்படுவதற்கான வாரண்ட் தன்னிடம் காண்பிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அமெரிக்கா அதிகாரிகள் என தங்களை தாங்களே சொல்லிக் கொண்ட நபர்கள், குப்தாவை உள்ளூர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கும் முன், மிரட்டியதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
4th card
அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்பட்டது- குப்தா வாதம்
சிறையில் இருந்த முதல் 10 முதல் 11 நாட்களுக்கு, தனக்கு உண்பதற்கு பன்றி இறைச்சி மற்றும் மாட்டு இறைச்சி வழங்கப்பட்டதாகவும், இந்துவான தன்னால் அதை உண்ண முடியாது என்பதால், தனக்கு சைவ உணவு வழங்கப்படவில்லை கூறியுள்ளார்.
இது, அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
நிகில் குத்தா இந்தியாவில் உள்ள தனது குடும்பத்துடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும், அமெரிக்க அதிகாரிகள் அனுமதித்தால் மட்டுமே அவர் குடும்பத்தினருடன் பேச அனுமதிக்கப்படுவார்கள் செக் குடியரசு அதிகாரிகள் தெரிவித்ததாகவும்,
இறுதியாக, 20 நாட்களுக்கு பின்னர், அவர் இந்திய அதிகாரியை சந்திக்க அனுமதிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
5th card
நிகில் குத்தா மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
குப்தா, அமெரிக்க-கனடிய குடியுரிமை பெற்ற காலிஸ்தானி பயங்கரவாதியான பன்னுனைக் கொல்ல, ஒரு கொலைகாரனை வேலைக்கு அமர்த்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
அதற்காக ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்க முன் வந்ததாகவும், அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், பன்னுனை கொலை செய்த பிறகு கனடாவில் மேலும் நான்கு நபர்களை கொள்ள வேண்டுமென, தான் பணியமர்த்த முயன்ற நபரிடம் கூறியதாகவும் குற்றப்பத்திரிகை தெரிவிக்கிறது.
குப்தா பணிக்கமர்த்த முயன்ற நபர், ரகசிய அமெரிக்க பெடரல் அதிகாரியான காரணத்தால், இந்த திட்டம் முறியடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.