Page Loader
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் குவியும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 

எழுதியவர் Nivetha P
May 02, 2023
07:24 pm

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு அரசு தற்போது பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு பள்ளிகளில் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிக கட்டணம் செலுத்தாமல் தரமான கல்வி அனைத்து ஏழை மாணவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்பதனை நோக்கமாக கொண்டு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது வந்துள்ள செய்திப்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறையிலேயே முதன்முறையாக அரசு தொடக்க பள்ளியில் 1ம் வகுப்பில் சேர்வதற்கு 60,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறை முடிந்த பின்னரே மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆனால் இம்முறை முன்னதாகவே மாணவர் சேர்க்கை துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post