இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!
செய்தி முன்னோட்டம்
மும்பையில் தங்களது முதல் ஸ்டோர் திறப்பைத் தொடர்ந்து டெல்லியில் இன்று தங்களது இரண்டாவது ஸ்டோரைத் திறந்திருக்கிறது ஆப்பிள்.
இந்த ஸ்டோர் திறப்பிற்காக இந்தியா வந்திருக்கும் ஆப்பிளின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், நேற்று (புதன்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்திருக்கிறார்.
டெல்லியின் செலக்ட் சிட்டிவாக் மாலில் இந்த இரண்டாவது ஸ்டோரை திறந்திருக்கிறது ஆப்பிள். வாரத்தின் ஏழு நாட்களும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை இந்த ஸ்டோர் செயல்படும் எனத் தெரிவித்திருக்கிறது ஆப்பிள்.
இந்தியாவின் 18 மாநிலங்களில் இருந்து 15-க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் வகையில், 70 பணியாளர்களை இந்த ஸ்டோரில் ஆப்பிள் நிறுவனம் பணியமர்த்தியிருக்கிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#WATCH | Apple CEO Tim Cook inaugurates India’s second Apple Store at Delhi's Select City Walk Mall in Saket. pic.twitter.com/KnqGiaf7oX
— ANI (@ANI) April 20, 2023