ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை!
2008-ம் ஆண்டு இணை ஆணையராகவும் 2015-17-ம் ஆண்டுகளில் சிவகங்கை மாவட்ட ஆட்சியராகவும், 2018-20-ம் ஆண்டுகளில் தருமபுரி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி மலர்விழி வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மலர்விழி தர்மபுரி மாவட்ட ஆட்சியர் பதவியில் இருந்த போது குழு மானிய நிதியிலிருந்து ரசீது புத்தகங்களை 2 தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்துள்ளார். மொத்தம் 1,25,500 ரசீது புத்தகங்கள் கிராம ஊராட்சிக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதனை அதிகபட்ச விலைக்கு கொள்முதல் செய்ததாக மலர்விழி, தாஹிர் உசேன், வீரய்யா பழனிவேல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.