Page Loader
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு
கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு

கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழத்தில் மீண்டும் ஒரு ராகிங் குற்றச்சாட்டு

எழுதியவர் Nivetha P
Nov 30, 2023
05:41 pm

செய்தி முன்னோட்டம்

மேற்கு வங்காளம் கொல்கத்தா நகரில் அமைந்துள்ளது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம். இங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி புதிதாக சேர்ந்த மாணவர் ஒருவர் ராகிங் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியானது. சீனியர் மாணவர்கள் சிலர் தங்கும் விடுதியில் அந்த மாணவரிடம் ராகிங் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த மாணவர் விடுதியின் 2ம் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவமனையில் அந்த மாணவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பி.எச்.சி.மாணவர், முதுநிலை மற்றும் 6 இளநிலை மாணவர்கள் என மொத்தம் 13 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது இவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ராகிங் 

இது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணை வேந்தர் தகவல் 

இதனையடுத்து, இந்த சம்பவத்தினை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் ராகிங் எதிர்ப்பு மற்றும் ஒழிப்பு கமிட்டி உருவாக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இந்த பல்கலைக்கழக ஆண்கள் விடுதியில் உள்ள முதுநிலை கலைத்துறை சேர்ந்த மாணவர் ஒருவர் தன்னை துன்புறுத்துவதாக சில மாணவர்களுக்கு எதிராக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பல்கலைக்கழக முதல்வருக்கும் இ-மெயில் அனுப்பியதாக தெரிகிறது. அதில் அவர், பல மனதளவிலான துன்புறுத்தல்கள் மற்றும் சித்ரவதைகளுக்கு ஆளானதாகவும், இதனால் தான் பாதுகாப்பாக உணரவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், 'இதற்கு மேல் படிப்பினை தொடருவது சாத்தியமில்லை' என்று குறிப்பிட்டுள்ள அவர், வேறு விடுதிக்கு தன்னை மாற்றும்படி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக துணை வேந்தர் புத்ததேவ் சாவ் தகவலளித்துள்ளார்.